Thursday, December 22, 2011

COLLECTIVE APPEAL TO PEOPLE OF TAMIL NADU AND KERALA- FOR TWO MONTH TRUCE


Dear Friends,
There is no doubt that Mullaiperiyaru Dam dispute has to be resolved at the earliest. As rightly pointed out by the Chief Ministers of Tamil Nadu and Kerala and understood by all that farmers of at least 5 districts of Tamil Nadu are dependent on the water  and people of Kerala are dependent on these Tamil Nadu formers for their produce.
However, the present agitation has the danger of spinning out of control, with violence, hate and intolerance taking over instead of discussions based on scientific facts and people’s legitimate concerns.

People are agitating in large numbers on both sides. Political parties in both the states are hardening  themselves  towards high pitched agitations. Despite Supreme Court appealing to Tamil Nadu and Kerala not to arouse people’s feelings, this is what exactly few political parties and fringe elements are doing in both the states. Supreme Court can’t go beyond a point in a federal democratic set up.

A section of the Media, print and visual in both the states are also adding fuel to the fire and sensationalizing the issue. 

High pitched agitations have already taken a toll on the livelihood of thousands of poor labourers, small traders and farmers on either side. Large number of daily wage earners  are going hungry. Farmers in Tamil Nadu and Plantations in Kerala are already incurring huge losses and future losses cannot be compensated.

History has shown us the great pain and sorrow of partition, several riots in various parts of India, the most recent being Gujarat pogrom, Anti-Sikh riots and the ongoing Telangana agitation.
All said and done, Geography cannot be changed and People of Tamil Nadu and Kerala have to live side by side, as long as Earth exists. They have to learn to co-exist and thrive despite difference of opinion. This can be achieved only through dialogue, tolerance and re-conciliation.

This flare-up and confrontation  proves that we may have Political leaders in our midst, but certainly not Statesmen. Many concerned citizens in both the states may be helplessly watching the issue blowing into full throated confrontation. Silence of the socially concerned citizens should not be construed as a support for violent actions on the streets.

We are in the midst of Christmas,  the birthday of Apostle of peace. It is to be followed by the grand Pongal, festival  of working class.  Thousands of devotees from Tamil Nadu are visiting Lord Ayyappan. And thousands from Kerala will be visiting Palani for  Maasi Maham. Let this festive season be not remembered for fostering hate and violence among our two neighbors and deprivation of poor farmers and labourers.

In this 21st century, disputes can be resolved only through dialogue, scientific evidence and with a give and take approach and not through confrontation. The Governments of Tamil Nadu, Kerala  and Union Government with the guidance of Supreme Court will explore an amicable settlement  based on scientific evidence.

In the meantime, let everyone concerned suspend all types of agitations on this issue and keep truce for the next 60 days.  However, healthy dialogue at all levels can continue.  Even Israel and Palestine declare truce.

We appeal to concerned Citizens, Writers, Authors, Artists, Scholars,  Professors, Teachers, Farmer Leaders, Gandhians,  Religious Leaders, Spiritual Leaders,  Atheists, Students and ordinary men and women who believe in dialogue and reconciliation to raise their voice as one and appeal for calm and cessation of hostile statements and street protests on both sides. Time is short and each passing second may lead us towards destruction.

We urge all who believe in humaneness to support this Truce for 2 months and appeal for peace and harmony. Please forward to others to extend this chain of goodwill
         ‘United we live - If there is disunity, we are all disgraced’ 

In solidarity with the aspirations of people of both Tamil Nadu and Kerala,
We remain
1.Dr.V.Jeevanandham,President, TN Green Movement
2.A.Narayanan, Development Activist & Editor, paadam Tamil Magazine
3. Dr.Markandan, Former Vice Chancellor, Gandhigram Univeristy
4. Sheelu Francis, Women’s Collective
5. R.Selvam, Tamilnadu Organic Farmers Assn
6. Perur Jayaraman
Please support this campaign by posting " I SUPPORT THIS APPEAL" in the comments .


தமிழக, கேரள மக்களுக்கு ஒரு விண்ணப்பம்- இரு மாத கால மோதல் விடுமுறைவேண்டும்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனை, கூடிய சீக்கிரம் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று. இந்த நீரை நம்பித் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் விவசாயிகள் உள்ளனர், அதே போன்று, தமிழக விவசாயிகளின் விளைபொருட்களை எதிர்பார்த்து கேரள மக்கள் தினமும் வாழ்ந்து வருகிறார்கள், ஒருவரின்றி மற்றவரில்லையெனப் பிணைக்கப்பட்டது, நமது வாழ்வு.  இதனை, நம் இரு மாநில முதல்வர்களும் வலியுறுத்தி, சமாதானத் தீர்வு தேவை என கூறியுள்ளனர். எனினும், அணையின் பாதுகாப்பு பற்றிய பயமும், நீர்ப்பகிர்வு தொடர்பான கருத்து வேற்றுமையும் பூதாகரமான  பிரச்சனையாகி, மோதல்கள் வளர்ந்து வலுத்து வருகின்றன.
            சமாதானம், பேச்சுவார்த்தை, பகிர்வு ஆகியவை,  அறிவியல் ஆதாரங்களையும், மக்களின் நியாயமான கவலைகளையும் கடந்து, மக்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பாலும், மலிவு அரசியலாலும், பிராந்திய உணர்வினாலும், புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெறுப்பும், பகையும், மோதலும், வன்முறையும் வரம்பு கடந்துவிடும் அபாய நிலையை அடைந்துள்ளன.
              இரு பக்கமும்  அரசியல் கட்சிகளும், சில குறுகிய பார்வை கொண்ட அமைப்புகளும் மோதலை வளர்ப்பதில் முன்னிற்கின்றன. உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் என்ற  உச்சநீதி மன்றத்தின் அறிவுரையும், வேண்டுகோளும் கேட்பாரின்றி காற்றில் கரைகிறது. பிராந்திய ஜனநாயக அமைப்பில், உச்சநீதிமன்றம் ஓரளவு தான் தலையிட முடியும். இரு மாநிலங்களிலும் உள்ள சில ஊடகங்களின் செயல்பாடுகள், சமாதானத்தை வளர்ப்பதற்கு பதில் எரிகிற நெருப்பில் எண்ணெய்  வார்ப்பதாகவே உள்ளன. 
                இந்த உச்சகட்ட போராட்டங்களானது, இரு மாநிலங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. தமிழகத்திலும், கேரளத்திலும் பல லட்சம் மலையாளிகளும், தமிழர்களும் மாநிலம் தாண்டி, உழைக்கும் மக்களாக, சிறு வணிகர்களாக, பணியாளர்களாக, மருத்துவர்களாக, செவிலியர்களாக, கலைஞர்களாக, மாணவர்களாக வாழ்ந்து வருகின்றனர். (ஏன், கேரளத்தில் பிறந்த எம்.ஜி.ஆர், தமிழர்களோடு பின்னிப்பிணைந்து கொண்டு, மனித நேயம் மிக்க தலைவராக, நீண்டகாலம் மக்களை வழி நடத்தவில்லையா?) இவர்கள் ஒவ்வொரு நொடியும் இழப்புகளிலும், அச்சத்திலும் துடித்துக் கொண்டுள்ளனர்.
                 அரசியல் விடுலைக்குப் பின், நாட்டுப்பிரிவினை தொடர்பான வன்முறைகள்,  குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெடித்த மதவெறி மோதல்கள், சீக்கியர் மீதான வன்முறை, தெலுங்கானா போராட்டம், தீவிரவாதம் என எண்ணற்ற துயரங்களை  நாடு சந்தித்து விட்டது. வன்முறைகள் எவ்விதத் தீர்வையும் தந்துவிடவில்லை.
            பூகோளம் மாறப்போவதில்லை. புவி இருக்கும் வரை, தமிழகமும், கேரளமும் ஓருவருக்கொருவர் சகித்து, உதவி வாழவேண்டிய அண்டைவீட்டார் தான்.   கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், கூடி வாழ்வாங்கு வாழ வேண்டியவர்களே. சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், பேசித்தீர்த்தல், பகிர்தல் என்பனவே, நம்  எதிர்கால நலனுக்கான தவிர்க்க முடியாத தேவைகள்.
                நமது இருமாநிலங்களுக்கு இடையிலான மோதலில், பிரதமரும் பேசாமடந்தை ஆகி விட்டார். உணர்வுகளின் தூண்டலின் உடனடி அனுகூலங்களே, பெரும்பாலான அரசியல் தலைவர்களின் சிந்தனையை ஆக்கிரமிப்பதைக் காண்கிறோம். நம்மிடையே அரசியல் தலைவர்கள் இருக்கலாம், மக்களை வழி நடத்தக்கூடிய தீர்க்கதரிசிகள் இல்லை என்பது தான் துரதரிஷ்டம்.
                  அன்பின் தூதுவர் ஏசுபிரான் அவதரித்த கிருஸ்துமஸ் நாள் வருகிறது.  உழைக்கும் மக்களின் ஒற்றுமைத் திருநாள் பொங்கல் வருகிறது. மாநில எல்லைகள் கடந்து பக்தியாளர்கள் சபரிமலையிலும், பழனியிலும் அடுத்தடுத்து கூடும் காலம் இது. இந்த ஆண்டின் கிறிஸ்மஸ்சும், பொங்கலும், போராட்டம், வெறுப்பு, வன்முறை, பட்டினி, வேலையிழப்பு ஆகியவற்றால் நினைவுகூறப்பட வேண்டாம்.
                      21 ஆம் நூற்றாண்டு காலத்தில், பேச்சுவார்த்தை, அறிவியலின் துணை, விட்டுக்கொடுத்தல் மூலம் தான், சச்சரவுகளைத் தீர்க்க முடியும். இக்காலத்தில் கற்கால ரத்த மோதல்களுக்கு இடமில்லை. தமிழக, கேரள அரசுகளும் மத்திய அரசும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன், நல்லதொரு தீர்வினை எட்டுவார்கள் என்று நம்புவோம்.,
                       தீராத பகைகொண்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் கூட, போர் நிறுத்த அறிவிப்பு விடும் காலம் இது. இரு மாத காலத்திற்கு, மோதல் விடுமுறை அறிவிப்போம். அமைதி விரதம் ஏற்போம். சிந்திப்போம். பிரார்த்திப்போம்.
           சமூகத்தில் அக்கறை கொண்டோரின் மௌனமே அநீதிக்குத் துணையாகிவிடக் கூடும். இரு மாநிலங்களிலும் உள்ள சமூகப் பொறுப்பும், சமாதான சகவாழ்வு வேட்கையும் கொண்ட நல்லவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், காந்தியர்கள், ஆன்மீகத் தலைவர்கள், விவசாயத்தலைவர்கள், வணிக சங்கங்களின் தலைவர்கள், மாணவர்கள், பெண்கள், பகுத்தறிவாளர்கள் எல்லோரும் இணைந்து, இரு மாத கால மோதல் விடுமுறைக்காக குரல் கொடுக்க  வேண்டிய உண்மைத் தருணம் இது.
              ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
              ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே.
                என்பதை உணர்த்த ஒவ்வொரு மனித நேயரையும் இந்த அன்பு வேண்டுகோளில் இணைந்துகொள்ள அழைக்கிறோம். இந்த நற்செய்தியை மற்றோருக்கும் அனுப்பிவைத்து, நல்லிணக்க வளையத்தை விரிவு படுத்த உதவுங்கள்.
வாருங்கள் !   அன்பை விதைப்போம் !    பகிர்வை வளர்ப்போம். !

இப்படிக்கு,
அமைதிக்குரல் கொடுக்க முன்வரும் சமூக ஆர்வலர்கள்.
1.   வீ. ஜீவானந்தம், தமிழ் நாடு பசுமை இயக்கம்
2. மார்க்கண்டன், முன்னாள் துணைவேந்தர், காந்திகிராம் பல்கலை.
3. .நாராயணன், சமூக ஆர்வலர், பாடம் இதழ் ஆசிரியர்
4. ஷீலு பிரான்சிஸ், பெண்கள் கூட்டமைப்பு.
5. இரா. செல்வம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம்  
6.  பேரூர் ஜெயராமன்

இந்த விண்ணப்பத்தை ஆதரிக்கிறீர்கள் என்றால், "நான் இந்த ஆலோசனையை ஆதரிக்கிறேன்" என்று கீழே குறிப்பிடுங்கள்